4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு


4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 25 Dec 2025 10:59 AM IST (Updated: 25 Dec 2025 11:02 AM IST)
t-max-icont-min-icon

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

சென்னை,

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், 4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story