7 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
Published on

சென்னை,

தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (feeble Trough) நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம், கடலூர், ஈரோடு, பெரம்பலூர், மதுரை, திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com