

சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வேகமெடுத்து வருகிறது. பல இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, விழுப்புரம் கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தேனி, விருதுநகர் மற்றும் நாமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.