

சென்னை:
தமிழகத்தில் சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முரசு புயல் இன்று இரவு சென்னை கடற்கரையை நெருங்கி, பின்னர் ஆந்திரத்தின் நெல்லூர் மற்றும் நரசபூர் இடையே நள்ளிரவில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழக கடற்கரை மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
இதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.