3 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை
கோப்புப்படம்
Published on: 

சென்னை,

நேற்று நிலவிய தீவிரக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை வலுவிழந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தெற்கு உள் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய சத்தீஸ்கர் பகுதிகளில் நிலவியது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு உள் ஒடிசா பகுதிகளில் நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com