'மோந்தா' புயல்; சென்னையில் இரவு முதல் மழைப்பொழிவு அதிகரிக்கும்

சென்னையில் 28-ம் தேதி பகல் வரை கனமழை நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
சென்னை,
தென்கிழக்கு வங்கக்கடலில் மோந்தா புயல் உருவாகி உள்ளது. ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே, காக்கி நாடாவுக்கு அருகே தீவிர புயலாக நாளை (அக்டோபர் 28) மாலை அல்லது இரவில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தற்போது மோந்தா புயல் ஆந்திரப் பிரதேச கடற்கரையை நெருங்கி வருகிறது. இதனால், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
'மோந்தா' புயல் அக். 28-இல் கரையைக் கடக்கவுள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மதியத்தில் இருந்தே மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. சென்னையில் இன்றிரவிலிருந்து மழை படிப்படியாக அதிகரிக்கும் என்ற தகவலை தமிழ்நாட்டைச் சேர்ந்த வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜாண்(தமிழ்நாடு வெதர்மேன்) வெளியிட்டுள்ளார்.
அதன்படி, சென்னையில் இன்று(அக். 27) இரவிலிருந்து மழைப்பொழிவு படிப்படியாக அதிகரித்து செவ்வாய்க்கிழமை (அக். 28) காலை அல்லது பகல் வரை நீடிக்கும் என்றும், அதன்பின் மழைக்கு வாய்ப்பில்லை என்றும் தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கேடிசிசி பகுதிகலில் இதே வானிலை நிலவக் கூடும் என்றும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.






