தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்..?

தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்..?
Published on

சென்னை,

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் தென்தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து வலுவிழக்க வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 17 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், கோவை ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com