தமிழகத்தின் 8 இடங்களில் சதமடித்த வெயில்

குறிப்பாக பகல் நேரங்களில் மக்களால் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது.
தமிழகத்தின் 8 இடங்களில் சதமடித்த வெயில்
Published on

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்து வரும் அதே வேளையில், ஒருசில இடங்களில் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக பகல் நேரங்களில் மக்களால் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெப்பக்காற்று வீசி வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் 8 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் தாண்டி பதிவான இடங்கள் விபரம்;

* மதுரை விமான நிலையம் - 104 டிகிரி பாரன்ஹீட்

* மதுரை நகரம் - 103 டிகிரி பாரன்ஹீட்

* ஈரோடு - 101 டிகிரி பாரன்ஹீட்

* வேலூர் - 101 டிகிரி பாரன்ஹீட்

* நாகை - 101 டிகிரி பாரன்ஹீட்

* கடலூர் - 101 டிகிரி பாரன்ஹீட்

* திருச்சி - 100 டிகிரி பாரன்ஹீட்

* சென்னை மீனம்பாக்கம் - 100 டிகிரி பாரன்ஹீட்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com