தமிழகத்தில் 6 இடங்களில் இன்று வெயில் சதம்

அதிகபட்சமாக மதுரை நகரத்தில் 100.76 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
வெயில் சதம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் 5 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று அதிகமாக வெப்பநிலை பதிவான இடங்கள் வருமாறு:-

மதுரை நகரம் - 100.76° பாரன்ஹீட் (38.2° செல்சியஸ்)

திருச்சி - 100.58° பாரன்ஹீட் (38.1° செல்சியஸ்)

மதுரை விமான நிலையம் - 100.4° பாரன்ஹீட் (38.0° செல்சியஸ்)

தஞ்சாவூர் - 100.4° பாரன்ஹீட் (38.0° செல்சியஸ்)

பாளையங்கோட்டை - 100.22° பாரன்ஹீட் (37.9° செல்சியஸ்)

வேலூர் - 100.04° பாரன்ஹீட் (37.8° செல்சியஸ்)

X

Daily Thanthi
www.dailythanthi.com