தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது

அந்தமானில் இன்று தொடங்கிய தென்மேற்கு பருவமழை மே 26-ம் தேதி கேரள நிலப்பரப்பில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது
Published on

புதுடெல்லி,

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இந்தாண்டுக்கான தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.

அந்தவகையில், தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது.

அந்தமானில் இன்று தொடங்கிய தென்மேற்கு பருவமழை மே 26-ம் தேதிவாக்கில் கேரள நிலப்பரப்பில் தொடங்கும். இந்தியாவின் மிக முக்கிய நீர் ஆதரமாக தென்மேற்கு பருவமழை விளங்குகிறது.

இந்தாண்டு தமிழ்நாட்டில் வழக்கத்தைவிட 6 நாள்களுக்கு முன்பாகவே தென்மேற்குப் பருவமழை தொடங்கி உள்ளது. இன்று (மே 16) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com