

புதுடெல்லி,
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல பகுதிகளிலும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி வட இந்தியா உள்பட நாடு முழுவதும் வெப்ப அலை வீச தொடங்கியுள்ளது. வெப்பம் தணிந்து பருவமழை எப்போது தொடங்கும் என்று மக்கள் எதிர்பார்த்து உள்ள நிலையில், தென்மேற்கு பருமவழை நடப்பு ஆண்டு முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளா மற்றும் தமிழகத்தில் வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு 1 வாரத்திற்கு முன்னதாகவே தொடங்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதத்தின் தொடக்கத்திலேயே சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட குறைவாகவே இருக்கும் என்று ஏற்கனவே கணிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பெரும்பாலான பகுதிகள் தென்மேற்கு பருவமழையினால்