தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்க வாய்ப்பு - வானிலை மையம்

தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு வழக்கத்தை விட ஒரு வாரம் முன்னதாகவே துவங்கும் என்று கூறப்பட்டது.
தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்க வாய்ப்பு - வானிலை மையம்
Published on

புதுடெல்லி,

கேரளம், கர்நாடகா உட்பட பல மாநிலங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வது தென்மேற்கு பருவமழை. ஆண்டுதோறும் ஜூன் 1 அல்லது அம்மாதத்தின் முதல் வாரத்தில் இந்த பருவமழை துவங்குவது வழக்கம். செப்டம்பர் இறுதி வரை மழை நீடிக்கும்.

கேரளம், கர்நாடகத்துக்கு பிரதான மழைக்காலம் என்றாலும், தமிழகத்தில் 32 செ.மீ., அளவுக்கு தென்மேற்கு பருவமழை காலத்தில் மழை பொழிவு இருக்கும்.

கடந்த ஆண்டு, 35 செ.மீ., அளவுக்கு மழை பெய்தது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு வழக்கத்தை விட ஒரு வாரம் முன்னதாகவே துவங்கும் என்று கூறப்பட்டது.

இந்தநிலையில், தென் மேற்கு பருவமழை அந்தமான் நிகோபார் தீவு பகுதிகளில் நாளை மறுநாள் தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன்காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com