தாக்கும் புயல்: காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி டிட்வா புயல் நகர்ந்து வருகிறது.
தாக்கும் புயல்: காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
Published on

சென்னை,

டிட்வா புயல் காரணமாக இன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 23 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும்,

அரியலூர், கோவை, திண்டுக்கல், கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருவாரூர், திருச்சி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com