சென்னையில் பலத்த காற்றுடன் திடீரென மாறிய வானிலை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
சென்னையில் பலத்த காற்றுடன் திடீரென மாறிய வானிலை
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. காலை முதலே வெயில் சுட்டெரித்து வந்தது. குறிப்பாக சென்னையில் கடும் வெயில் நிலவியது.

இந்நிலையில், சென்னையில் இன்று திடீரென வானிலை மாறியது. நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் குளிர்ச்சியான சூழ்நிலை காணப்படுகிறது. எழும்பூர், புரைசைவாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் திடீரென சூறைக்காற்று வீசியது.

பலத்த காற்றால் வெப்பம் தணிந்து சற்றும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

பலத்த காற்றும் திடீரென வீசி வரும் நிலையில் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com