

சென்னை,
பசிபிக் பெருங்கடலில் நிலவும் வலுவான எல் நினோ நிகழ்வுகள் காரணமாக, இந்தியப் பகுதிகளில் பருவமழைக் காற்று பலவீனமடைந்து, வறண்ட நிலப்பரப்பும் வெப்பமும் அதிகரிக்கின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் இம்மாதம் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும்,தென்மேற்கு பருவமழைக்காலம் தீவிரமடைந்து வரும் நிலையிலும், நடப்பு மாதத்தில் ஒட்டுமொத்த மாநிலத்திலும் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகள் இயல்பைவிட அதிகமாக இருக்கும். உள் மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை அதிகமாக இருக்க வாய்ப்பு. கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை ஓரளவு குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர்.