தமிழகத்தின் 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய வெப்பம்

தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் வெயில் கொளுத்தியது.
தமிழகத்தின் 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய வெப்பம்
Published on

சென்னை,

தமிழகம் முழுவதும் கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயில் வாட்டி வதைக்கிறது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தில் 10 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது.

கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 106.1 டிகிரி வெயில் கொளுத் தியது. ஈரோட்டில் 104.3 டிகிரி, மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி, திருச்சியில் 103.1 டிகிரி, வேலூரில் 102.7 டிகிரி, கோயம்புத்தூரில் 101.6 டிகிரி, தர்மபுரி, நாமக்கல், பாளையங்கோட்டையில் 101.3 டிகிரி, சேலத்தில் 100.7 டிகிரி வெயில் பதிவானது. மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் வெயில் கொளுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com