தமிழகத்தின் 9 இடங்களில் சதமடித்த வெயில்

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
தமிழகத்தின் 9 இடங்களில் சதமடித்த வெயில்
Published on

சென்னை,

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் 9 இடங்களில் இன்று 100° பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு;

மதுரை விமானநிலையம்: 104 டிகிரி பாரன்ஹீட்

திருச்சி: 100.58 டிகிரி பாரன்ஹீட்

மதுரை நகரம்: 102.56 டிகிரி பாரன்ஹீட்

கடலூர்: 100.4 டிகிரி பாரன்ஹீட்

திருத்தணி: 101.3 டிகிரி பாரன்ஹீட்

நாகை: 100.4 டிகிரி பாரன்ஹீட்

சென்னை நுங்கம்பாக்கம்: 100.9 டிகிரி பாரன்ஹீட்

தஞ்சாவூர்: 100.4 டிகிரி பாரன்ஹீட்

மீனம்பாக்கம்: 100. டிகிரி பாரன்ஹீட்

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com