தமிழகத்தில் இன்று 10 இடங்களில் சதமடித்த வெயில்

அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 106.52° பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று 10 இடங்களில் சதமடித்த வெயில்
Published on

சென்னை,

பசிபிக் பெருங்கடலில் நிலவும் வலுவான எல் நினோ நிகழ்வுகள் காரணமாக, இந்தியப் பகுதிகளில் பருவமழைக் காற்று பலவீனமடைந்து, வறண்ட நிலப்பரப்பும் வெப்பமும் அதிகரிக்கின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் இம்மாதம் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவமழைக்காலம் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தாலும், சில பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

மதுரை விமான நிலையம் - 106.52°

மதுரை நகரம் - 103.64°

திருத்தணி - 102.2°

வேலூர் - 102.2°

மீனம்பாக்கம் - 101.3°

திருச்சி - 101.3°

நாகை - 100.4°

நுங்கம்பாக்கம் - 100.04°

கடலூர் - 100.04°

பாளையங்கோட்டை - 100.04°

X

Daily Thanthi
www.dailythanthi.com