தமிழகத்தில் 7 இடங்களில் சதம் அடித்த வெயில்

தமிழகத்தின் 7 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 7 இடங்களில் சதம் அடித்த வெயில்
Published on

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தாலும், சில பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் 7 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;

* மதுரை விமான நிலையம் 103 டிகிரி பாரன்ஹீட்

* மதுரை நகரம் 103 டிகிரி பாரன்ஹீட்

* மீனம்பாக்கம் 102 டிகிரி பாரன்ஹீட்

* நுங்கம்பாக்கம் 102 டிகிரி பாரன்ஹீட்

* திருச்சி 101 டிகிரி பாரன்ஹீட்

* தஞ்சை 100 டிகிரி பாரன்ஹீட்

* நாகை 100 டிகிரி பாரன்ஹீட்

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com