

சென்னை,
உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடுமென வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், தமிழகத்தின் 6 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.
குறிப்பாக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அதிகபட்சமாக 104.36 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும் திருச்சி(103), தஞ்சை(102), மதுரை(102), ஈரோடு(100), மற்றும் பரங்கிப்பேட்டை(100) ஆகிய இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.