தமிழ்நாட்டில் அதிகரிக்கத் தொடங்கிய வெயில்.. கரூரில் இன்றும் சதமடித்த வெப்பநிலை..!


தமிழ்நாட்டில் அதிகரிக்கத் தொடங்கிய வெயில்.. கரூரில் இன்றும் சதமடித்த வெப்பநிலை..!
x

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

சென்னை,

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் நிலவும் வெப்ப அலை காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியேற தயங்குகின்றனர். மேலும், வெப்பத்தை தனிக்க மக்கள் இளநீர், தர்பூசனி மற்றும் குளிர்பான கடைகளை நாடிச்செல்வதை காண முடிகிறது.

இந்த நிலையில், இன்று கரூரில் இன்றும் அதிகபட்சமாக 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது, ஈரோட்டில் 99 டிகிரி பாரன்ஹீட்டாகவும், திருப்பத்தூர், கோவை மற்றும் சேலத்தில் 98 டிகிரி பாரன்ஹீட்டாகவும், மதுரை, தருமபுரி, தஞ்சாவூரில் 97 டிகிரி பாரன்ஹீட்டாகவும் வெப்பம் பதிவாகியுள்ளது.


1 More update

Next Story