தமிழகத்தில் 5 இடங்களில் இன்று வெயில் சதம்

அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 103.1° பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
வெயில் சதம்
கோப்புப்படம்
Published on: 

சென்னை,

தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் 5 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

பாளையங்கோட்டை - 103.1° பாரன்ஹீட் (39.5° செல்சியஸ்)

ஈரோடு - 101.48° பாரன்ஹீட் (38.6° செல்சியஸ்)

மதுரை நகரம் - 101.48° பாரன்ஹீட் (38.6° செல்சியஸ்)

மதுரை விமான நிலையம் - 101.12° பாரன்ஹீட் (38.4° செல்சியஸ்)

திருச்சிராப்பள்ளி - 100.94° பாரன்ஹீட் (38.3° செல்சியஸ்)

X

Daily Thanthi
www.dailythanthi.com