தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் எப்படி இருக்கும்? - வானிலை ஆய்வு மைய இயக்குநர் பேட்டி

டெல்டா மாவட்டங்களில் வழக்கத்தைவிட மழை அதிகமாக இருக்குமென சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறினார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் எப்படி இருக்கும்? - வானிலை ஆய்வு மைய இயக்குநர் பேட்டி
Published on: 

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வடகிழக்கு பருவமழை குறித்து அவர் பேசியதாவது;

தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் 21 சதவீதம் குறைவாகவே பதிவானது. தென்மேற்கு பருவமழை 2002-ம் ஆண்டில் 45 சதவீதம், 2012-ல் 23 சதவீதம், 2016-ல் 20 சதவீதம் குறைந்து பெய்தது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 21 சதவீதம் குறைந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவாகவும், தென் மாவட்டங்களில் அதிகமாகவும், கடலோர மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும். வானிலை தினசரி மாறுதலுக்கு உட்பட்டது. இந்த நாளில் திடீரென மழை பெய்யும், மேகம் வெடிப்பு ஏற்படும் என்று சொல்வது அறிவியலுக்கு எதிரானது. வடகிழக்கு பருவமழை காலத்தில் ஒரே இடத்தில் அதிகமான மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவு. பரவலாகவே மழை பெய்யும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் டெல்டா மாவட்டங்களில் வழக்கத்தைவிட மழை அதிகமாக இருக்கும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com