தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள 17 மாவட்டங்கள் எவை?

திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 மணி வரை மழை
Published on

சென்னை,

தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலவும் வளிமண்டல சூழல்

சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் வடக்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை, தெற்கு உள் கர்நாடகா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.

மேலும், சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய ராயலசீமா பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது.

எந்தெந்த மாவட்டங்களில் மழை?

இந்த வளிமண்டல நிலை காரணமாக, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, வேலூர் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய 17 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இடி, மின்னலுடன் மழை

மேற்கண்ட மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com