இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?

தமிழ்நாட்டின் குறிப்பிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (சனிக்கிழமை) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்

வெப்பநிலை இன்று இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். ஒரு சில பகுதிகளில் அசவுகரியம் ஏற்படலாம்.

நாளை (23-03-2025) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி, குமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதே நேரம் சென்னையில் மதிய வேளையில் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும்.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் வரும் 25-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com