

சென்னை,
வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு 'முரசு' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரப் புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் 4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.