

சென்னை,
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் 'அக்வான்' புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
இந்த புயல் 24-36 மணி நேரத்திற்கு வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, பின்னர் நவம்பர் 16 மற்றும் 17-ம் தேதிகளில் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலை கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சை திருவாரூர், விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.