இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை?

மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை
Published on

சென்னை,

இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்

அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, திருச்சிராப்பள்ளி, விருதுநகர், தேனி, திருநெல்வேலி, திருவள்ளூர், நாகப்பட்டினம், வேலூர் மற்றும் கோவை,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com