இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை?

வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை
Published on: 

சென்னை,

சென்னை மற்றும் புறநகரில் இன்றிரவு 7 மணி வரை கனமழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல், தீவிரப் புயலாக இன்று காலை வலுப்பெற்று, நெல்லூருக்கு (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கு-தென்கிழக்கே 140 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு (தமிழ்நாடு) வடகிழக்கே 170 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இந்த புயல் இன்று மாலை சென்னை கடற்கரையை நெருங்கி, பின்னர் ஆந்திரத்தின் நெல்லூர் மற்றும் நரசபூர் இடையே நள்ளிரவில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனால், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழக கடற்கரை மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், கோயம்புத்தூர், கடலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, நீலகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது.

X