நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?

நள்ளிரவு 1 மணி வரை 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
Published on

சென்னை,

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் நள்ளிரவு 1 மணி வரை 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, அரியலூர், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com