பிற்பகல் ஒரு மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?

அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடையும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று வலுவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் இலங்கை கடலோர பகுதி களை நோக்கி நகரலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தநிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வருகிறது.

இந்நிலையில் இது மேற்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது நாளை மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிற்பகல் 1 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் பிற்பகல் ஒரு மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com