பிற்பகல் 1 மணிவரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?

7 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 1 மணிவரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
Published on

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று (வியாழக்கிழமை) கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கோவை , திருநெல்வேலி, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com