இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?

16 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
Published on

சென்னை,

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே லேசான மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், 16 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், சேலம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com