பிற்பகல் 1 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?

பிற்பகல் 1 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதன்காரணமாக இன்று (13-01-2026) தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் ,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிற்பகல் 1 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி

அரியலூர்,

திண்டுக்கல்,

கரூர்,

மதுரை,

மயிலாடுதுறை,

நாமக்கல்,

பெரம்பலூர்,

ராமநாதபுரம்,

சிவகங்கை,

நீலகிரி,

திருச்சி,

நாகப்பட்டினம்,

புதுக்கோட்டை,

தஞ்சாவூர்,

திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது..

X

Daily Thanthi
www.dailythanthi.com