மாலை 4 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?


மாலை 4 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
x

மாலை 4 மணி வரை சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய வடக்கு தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைகளில் 7 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த டிட்வா புயல் தற்போது 12 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. ‘டிட்வா’ புயல் காரைக்காலுக்கு கிழக்கு-வடகிழக்கில் சுமார் 100 கிமீ, வேதாரண்யத்திற்கு வடகிழக்கில் 140 கிமீ மற்றும் சென்னைக்கு தென்-தென்கிழக்கில் 180 கிமீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தகவல் கூறியிருந்தது.

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று (30-11-2025) எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

திருவள்ளூர்

ராணிப்பேட்டை

ஆரஞ்சு அலர்ட்

சென்னை

காஞ்சிபுரம்

செங்கல்பட்டு

மஞ்சள் அலர்ட்

திருப்பத்தூர்

திருவண்ணாமலை

விழுப்புரம்

புதுச்சேரி

1 More update

Next Story