இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை?

ராமநாதபுரம், சிவகங்கை உள்பட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை?
Published on: 

சென்னை,

தமிழகத்தில் இன்று இரவு 7 மணிவரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9 மாவட்டங்களில் மழை

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com