தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்..?

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

2 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் (அதி கனமழை)

நீலகிரி,

கோவை

4 மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு அலர்ட் (மிக கனமழை)

ஈரோடு,

திருப்பூர்,

திண்டுக்கல்,

தேனி

10 மாவட்டங்களில் இன்று கனமழை

கிருஷ்ணகிரி,

தர்மபுரி,

சேலம்,

நாமக்கல்,

கரூர்,

திருச்சி,

பெரம்பலூர்,

மதுரை,

விருதுநகர்,

தென்காசி

15 மாவட்டங்களில் நாளை (03-12-2024) கனமழை

கிருஷ்ணகிரி,

தருமபுரி,

சேலம்,

நாமக்கல்,

கரூர்,

ஈரோடு,

நீலகிரி,

கோவை,

திருப்பூர்,

திண்டுக்கல்,

தேனி,

மதுரை,

திருச்சி,

பெரம்பலூர்,

திருப்பத்தூர்

சென்னை வானிலை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிர் செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

அரபிக்கடல் பகுதிகள், தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால், இன்றும், நாளையும் (3-12-2024) இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com