சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
சென்னை,
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அதன்படி, சென்னை சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், புழல், மேடவாக்கம், பெருங்குடி, அடையாறு, ராஜா அண்ணாமலை புரம், வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட இடங்களில் இன்று அதிகாலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






