சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
Published on

சென்னை,

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம், சென்ட்ரல், காமராஜர் சாலை, மெரினா உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மாநகர் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.  

X

Daily Thanthi
www.dailythanthi.com