சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலான மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலான மழை
Published on

சென்னை,

தெற்கு குஜராத்தில் இருந்து வடக்கு கேரளா வரை சராசரி கடல் மட்டத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதற்கிடையில், சென்னையில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில் தற்போது சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது. இதன்படி எழும்பூர், அண்ணாநகர், போரூர், பூந்தமல்லி, மாங்காடு, திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com