சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
Published on

சென்னை,

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னையில் மழை

இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை பரவலாக மழை பெய்தது. அதன்படி, சென்னையில் மயிலாப்பூர், சென்டிரல், எழும்பூர், புரசைவாக்கம், கிண்டி, புதுப்பேட்டை, போரூர், ஐயப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், வானகரம் உள்ள பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com