

சென்னை,
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.
சென்னை எழும்பூர், பெரியமேடு, சென்டிரல், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மாம்பலம், மயிலாப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது.
மழையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.