தமிழ்நாடு, கேரளாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் இன்று ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கொட்டி வருகிறது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்பு பணியில் ராணுவம், போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாவது நாளாக, இன்று காலை முதல் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம், அந்தப் பகுதிகளில் மழைப்பொழிவு அதிகம் இருக்கும் என தெரிவித்திருந்தது. மேலும் எர்ணாகுளம், திருச்சூர், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் இன்று ஒரு சில இடங்களில் 7 - 11 செ.மீ. மழைக்கு வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com