

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த சூழலில் தான் இந்திய வானிலை ஆய்வு மையம் வரும் அக்டோபர் 15 முதல் 21 ஆம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என தெரிவித்து இருந்தது. இந்நிலையில் வரும் 13 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டும்.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் தீவுகளை ஒட்டிய பகுதியில் வரும் 12 ஆம் தேதி வாக்கில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் தாக்கத்தால் அடுத்த நாளில் அதாவது வரும் 13 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூ
மிக கனமழை பெய்யும்
இதனால் தமிழகம் மற்றும் புதுவை, ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் இடி மற்றும் மின்னலோடு கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும். அதே சமயம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு குறைவு” என்று கூறியுள்ளது.