சுவீடனில் பள்ளிக்குள் கத்தியுடன் சென்று தாக்குதல் நடத்திய இளைஞர்: ஒருவர் பலி

தாக்குதலில் ஈடுபட்டவர் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
சுட்டு பிடித்தனர்
தாக்குதல் நடந்த பள்ளி,பாதுகாப்பிற்கு போலீசார் குவிப்பு
Published on

பாகர்ஸ்டா

மத்திய சுவீடனில் உள்ள ஒரு பள்ளியில், கத்தியுடன் நுழைந்த 18 வயது இளைஞர் ஒருவர் நடத்திய தாக்குதலில், ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் பலத்த காயம் அடைந்தனர்.

தாக்குதல்

சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமுக்கு வடமேற்கே அமைந்துள்ள பாகர்ஸ்டா நகரில், பிரினெல் உயர்நிலைப் பள்ளியில் நேற்று பிற்பகல் (வெள்ளிக்கிழமை) 18 வயது உள்ள இளைஞர் புகுந்து தாக்குதல் நடத்தி உள்ளார். பள்ளியில் அப்பொழுது 400 முதல் 500 மாணவர்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூன்று பேர் காயமடைந்தனர்.

துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்

தகவல் அறிந்தது விரைந்து வந்த போலீசார் கைது நடவடிக்கையின் போது அந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து அருகிலுள்ள பள்ளிகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டன. தாக்குதலில் ஈடுபட்டவர் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் குறித்துக் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை

இந்த வன்முறைச் சம்பவத்திற்கு அந்நாட்டு பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் வருத்தம் தெரிவித்தார். மேலும்,அவர் கூறியதாவது: இந்த வன்முறை செயலுக்குப் பின்னால் உள்ள காரணம் என்னவென்று எங்களுக்கு இன்னும் தெரியவில்லை, ஆனால் போலீசார் மிகத் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவிகள் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com