கழிவு நீரில் இருந்து தயாரிக்கப்பட்ட "ஜில்" பீர்... வரவேற்கும் குடிமகன்கள்

சிங்கப்பூரில் கழிவுநீரில் இருந்து மறுசுழற்சி செய்யப்படும் நீரில் இருந்து தயாரிக்கப்படும் பீருக்கு மதுபிரியர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
image credit: maalai malar
image credit: maalai malar
Published on

சிங்கப்பூர்,

சிங்கப்பூரில் கழிவுநீரில் இருந்து மறுசுழற்சி செய்யப்படும் நீரில் இருந்து பீர் தயாரிக்கப்பட்டு, 'நியூப்ரூ' என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

கழிவு நீர் முதலில் சிங்கப்பூர் குடிநீர் விநியோக சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பம்ப் செய்யப்பட்டு அதன்பின், வடிகட்டப்பட்ட சுத்தமான நீர் ஆகும். இவ்வாறு மறுசுழற்சி செய்யப்படும் குடிநீரின் பிராண்ட் நியூவாட்டர் எனப்படுகிறது. இந்த குடிநீரை பீர் தயாரிப்புக்கு பயன்படுத்துகின்றனர்.

சிங்கப்பூரில் தேசிய நீர் நிறுவனத்துடன் இணைந்து உள்ளூர் மதுபான நிறுவனமான ப்ரூவர்க்ஸ் இந்த சிறப்பு பீரை அறிமுகப்படுத்தியுள்ளது. கழிவு நீரில் இருந்து தயாரிக்கப்பட்டதா? என்ற சலசலப்பு இருந்தாலும், சிங்கப்பூர் முழுவதும் இந்த சிறப்பு பீர் பற்றிய பேச்சுதான் அடிபடுகிறது. இந்த பீர் மிகவும் சுவையாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த பீருக்கு தற்போது மதுபிரியர்கள் மத்தியில் எதிர்பார்த்ததை விட, அதிகளவில் வரவேற்பு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. இது மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் முயற்சியாகும். நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரிக்கத் தொடங்கியதால், கழிவுநீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றும் நீர் மறுசுழற்சி தொழில்நுட்பத்தை அரசு செயல்படுத்த தொடங்கி உள்ளது.

முதலில் கழிவு நீர் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, புற ஊதாக் கதிர்களால் சுத்திகரிக்கப்படுகிறது. மேலும் அது குடிநீராக மாறுவதற்கு முன்பு பல்வேறு சுத்திகரிப்பு நிலைகளில் அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு, அதன்பிறகே பயன்பாட்டிற்கு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com