பிரான்சில் கத்திக்குத்து தாக்குதல்; ஒருவர் பலி


பிரான்சில் கத்திக்குத்து தாக்குதல்; ஒருவர் பலி
x
தினத்தந்தி 23 Feb 2025 12:46 PM IST (Updated: 23 Feb 2025 1:47 PM IST)
t-max-icont-min-icon

பிரான்சில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.

பாரிஸ்,

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் இன்று கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றது. ஜெர்மனி, சுவிட்சர்லாந்து நாடுகளின் எல்லைகளுக்கு அருகே மல்ஹவுஸ் நகர் உள்ளது.

இந்த நகரில் சந்தை பகுதியில் இன்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த 69 வயது நபர் உயிரிழந்தார். மேலும், 3 பேர் காயமடைந்தனர். அல்ஜீரியா நாட்டை சேர்ந்த 37 வயதான நபர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார். கடவுளே சிறந்தவன் என அரபிய மொழியில் கூறியபடி அந்த நபர் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் கத்திக்குத்து தாக்குதலை நடத்திய நபரை கைது செய்தனர். இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் என்று பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story