சோமாலியாவில் நில கண்ணிவெடியில் பேருந்து சிக்கி 10 பயணிகள் உயிரிழப்பு

சோமாலியாவில் நில கண்ணிவெடியில் பேருந்து ஒன்று சிக்கியதில் 10 பயணிகள் உயிரிழந்தனர்.
சோமாலியாவில் நில கண்ணிவெடியில் பேருந்து சிக்கி 10 பயணிகள் உயிரிழப்பு
Published on

மொகதிசு,

சோமாலியா நாட்டின் தெற்கே கிஸ்மேயோ என்ற துறைமுக நகரை நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், ஜுபாலேண்ட் மாகாணத்தில் அரசு படைகளுக்கும், அல்-ஷபாப் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்து வந்தது.

இந்த மோதல்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தபோது, பயணிகள் பேருந்து நிலகண்ணி வெடி தாக்குதலில் சிக்கி கொண்டது. இதில், பேருந்து வெடித்து அதில் இருந்த பயணிகள் அலறினர்.

இந்த சம்பவத்தில் 10 பயணிகள் உயிரிழந்தனர். அவர்களில் 5 பேர் பெண்கள். 4 பேர் குழந்தைகள் ஆவர். 3 பேர்

காயமடைந்து உள்ளனர். அவர்கள் கிஸ்மேயோ நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com