பாகிஸ்தான் சிறையில் இருந்து 100 இந்திய மீனவர்கள் விடுதலை

பாகிஸ்தான் சிறையில் இருந்து முதற்கட்டமாக 100 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
பாகிஸ்தான் சிறையில் இருந்து 100 இந்திய மீனவர்கள் விடுதலை
Published on

கராச்சி,

சர்வதேச கடல் எல்லையை தாண்டி பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக 355 மீனவர்கள் உள்பட 360 இந்தியர்களை பாகிஸ்தான் கைது செய்து அங்குள்ள சிறைகளில் அடைத்துள்ளது. இந்தநிலையில், அவர்களை நல்லெண்ண அடிப்படையில் 4 கட்டங்களாக விடுவிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது.

அதன்படி, இன்று முதற்கட்டமாக 100 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அடுத்த கட்டமாக வருகிற 15 மற்றும் 22-ந் தேதிகளில் தலா 100 பேரும், 29-ந்தேதி மீதமுள்ள 60 பேரும் விடுவிக்கப்பட உள்ளனர். இன்று விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் லாகூரில் இருந்து அழைத்து வரப்பட்டு நாளை (திங்கட்கிழமை) வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com