100 ஆண்டு பழமையான இங்கிலாந்து வீட்டில் ரூ.1 லட்சம் பழைய நோட்டுகள் மீட்பு

இந்த ரூபாய் நோட்டுகள் 1970-களின் காலகட்டத்தை சேர்ந்தவை என்பது தெரியவந்துள்ளது.
 100 ஆண்டு பழமையான இங்கிலாந்து வீட்டில் ரூ.1 லட்சம் பழைய நோட்டுகள் மீட்பு
Published on

லண்டன்,

இங்கிலாந்தின் ஷெபீல்ட் நகரில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான வீட்டின் படிக்கட்டுக்கு அடியில், பெயிண்ட் டப்பாவுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள பழைய பணக்கட்டுகள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுப்பிக்கும் பணி

இங்கிலாந்தின் ஷெபீல்ட் நகரை சேர்ந்த ஒரு இளம் தம்பதியினர், தங்களுக்கு சொந்தமான பழமையான வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த வீடு 1900-ஆம் ஆண்டுக்கு முன்பே கட்டப்பட்ட 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான ஒரு பாரம்பரிய வீடாகும்.

பவுண்ட் நோட்டுகள்

வீட்டின் அடித்தளத்தில் உள்ள படிக்கட்டுகளுக்கு அடியில் இருக்கும் சுவரை இடித்து சுத்தம் செய்தபோது, அங்கு ஒரு பழைய இரும்பு பெயிண்ட் டப்பா துருப்பிடித்த நிலையில் கிடந்தது. அந்த டப்பாவை திறந்து பார்த்த தம்பதியினருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதற்குள் பேப்பரால் சுற்றப்பட்ட பழைய காலத்து இங்கிலாந்து பவுண்ட் நோட்டுகள் கட்டுக்கட்டாக அடுக்கப்பட்டிருந்தன.

1 லட்சம்

இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வீடு 100 ஆண்டுகள் பழமையானது என்றாலும், இந்த நோட்டுகள் 1970-களின் காலகட்டத்தை சேர்ந்தவை என்பது தெரியவந்துள்ளது.

வீடியோ

அந்த நோட்டுகளை பத்திரமாக உலர வைத்து, வங்கியில் கொடுத்து தங்களது வீட்டுப் பில்களை செலுத்த பயன்படுத்தி கொண்டதாக அவர்கள் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com